ADDED : ஜன 25, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
64 பேர் சிறையில் அடைப்பு
நாமக்கல், :நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வழக்குகளில், விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடிக்க, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, ஒரு வாரமாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், நாமக்கல் மாவட்டத்தில், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகிய வழக்குகளில் தொடர்புடைய, 64 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

