/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
86 மையங்களில் பிளஸ் 1 தேர்வு18,898 பேர் பங்கேற்பு; 332 பேர் 'ஆப்சென்ட்'

ADDED : மார் 06, 2025 01:43 AM
86 மையங்களில் பிளஸ் 1 தேர்வு18,898 பேர் பங்கேற்பு; 332 பேர் 'ஆப்சென்ட்'
நாமக்கல்:மாவட்டத்தில், 86 மையங்களில் நடந்த, பிளஸ் 1 பொதுத்தேர்வில், 18,898 மாணவர்கள் தேர்வெழுதினர். 332 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர்.
தமிழகம் முழுதும், பிளஸ் -1 பொதுத்தேர்வு, நேற்று தொடங்கி, வரும், 27 வரை நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், ஏழு அரசு உதவிபெறும் பள்ளி, 95 அரசுப்பள்ளி, நான்கு அரசு உதவிபெறும் (பகுதி அளவு) பள்ளி, 92 தனியார் பள்ளிகள் என, மொத்தம், 198 பள்ளிகளை சேர்ந்த, 19,230 மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள், 223 பேரில், 168 பேருக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வுக்காக, 86 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், முதன்மை கண்காணிப்பாளர்கள், 86 பேர், துறை அலுவலர்கள், 86 பேர், கூடுதல் துறை அலுவலர்கள், நான்கு பேர், பறக்கும் படை உறுப்பினர்கள், 200 பேர், வழித்தட அலுவலர்கள், 24 பேர், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், மூன்று பேர், அறைகண்காணிப்பாளர்கள், 1,260 பேர் என, மொத்தம், 1,663 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று நடந்த தேர்வில், 18,898 பேர் பங்கேற்றனர். 332 பேர் கலந்துகொள்ளவில்லை. அதில், பிரெஞ்ச் மொழி பாடத்தில், 21 பேரில், ஆறு பேர் தேர்வெழுதினர், 15 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது.