ADDED : செப் 22, 2026 04:14 AM
எலச்சிபாளையம்; எலச்சிபாளையத்தில் நேற்று, ஏ.ஐ.டி.யூ.சி., 8வது மாவட்ட மாநாடு மற்றும் பேரணி பொதுக் கூட்டம், மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். தேசிய துணை தலைவர் சுப்பராயன் சிறப்புரையாற்றினார். கூட்-டத்தில், மத்திய அரசின், 44 தொழிலாளர் நல சட்-டங்களை, 4 சட்ட தொகுப்பாக திருத்தம் செய்து அமல்படுத்தியதை வாபஸ் பெற வேண்டும். கடந்த, 12 ஆண்டுகளாக நாள்தோறும் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை-வாய்ப்பு
உருவாக்க வேண்டும்.
கிராமப்புற மக்களுக்கு, 100 நாள் வேலையை, கடந்த ஐக்கிய முன்னணி அரசு மகாத்மா காந்-தியின் பெயரில் வழங்கியது. தற்போது மத்திய அரசு புதிய சட்டத்தை உருவாக்கி, 100 நாள் வேலை சட்டத்தை மாற்றியதை திரும்ப பெற வேண்டும். விவசாயிகள் பெற்ற பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
