/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெயிலால் 2 நாளில் 90 லட்சம் கோழி இறப்பு:உற்பத்தி சரிந்து முட்டை விலை உயர வாய்ப்பு
/
வெயிலால் 2 நாளில் 90 லட்சம் கோழி இறப்பு:உற்பத்தி சரிந்து முட்டை விலை உயர வாய்ப்பு
வெயிலால் 2 நாளில் 90 லட்சம் கோழி இறப்பு:உற்பத்தி சரிந்து முட்டை விலை உயர வாய்ப்பு
வெயிலால் 2 நாளில் 90 லட்சம் கோழி இறப்பு:உற்பத்தி சரிந்து முட்டை விலை உயர வாய்ப்பு
ADDED : மே 07, 2024 02:36 AM
நாமக்கல்:வெயிலால், 2 வாரங்களில், 90 லட்சம் கோழிகள் இறந்ததால், முட்டை உற்பத்தி, 20 சதவீதம் சரிந்து, அதன் விலை உயர வாய்ப்புள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. அங்கு, 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினமும், 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டம், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு(நெக்), தினமும் முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த ஏப்., 1ல் கொள்முதல் விலை, 415 காசாக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு, 18ல், 440 காசாக நிர்ணயிக்கப்பட்டது. பின் படிப்படியாக இறங்கி, 29ல், 415 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து கொள்முதல் விலை படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம், 510 காசாக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று மேலும், 5 காசு அதிகாரித்து, 515 காசாக விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதன் தாக்கத்தை தாங்காமல், 2 வாரங்களில், 90 லட்சம் கோழிகள் இறந்துள்ளன. மின் வினியோகமும் சரியாக இல்லாததால் கோழிகளுக்கு தண்ணீர் வழங்க முடியவில்லை. 45 ஆண்டுகளில், குஞ்சுகள் இறந்தது இல்லை. ஆனால் தற்போது ஒரே நாளில், 10 முதல், 15 சதவீத கோழிக்குஞ்சுகள் இறந்துள்ளன. முட்டை உற்பத்தி, 20 சதவீதம் வரை சரிந்துள்ளது. தினமும், 5 கோடி முட்டை உற்பத்தி செய்த நிலையில், தற்போது, 3.50 கோடியாக குறைந்துள்ளது. அதனால் முட்டை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதேநிலை நீடித்தால் முட்டை கொள்முதல் விலை, 600 காசுக்கு மேல் உயர வாய்ப்புள்ளது. இரவில் தண்ணீர் சூடாக இருப்பதால் கோழிகள் தண்ணீர் குடிப்பதில்லை. அதனால் இறக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறையால் வெளியில் இருந்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.