/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில் தவித்த 5 வயது சிறுமி பத்திரமாக மீட்பு
/
ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில் தவித்த 5 வயது சிறுமி பத்திரமாக மீட்பு
ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில் தவித்த 5 வயது சிறுமி பத்திரமாக மீட்பு
ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில் தவித்த 5 வயது சிறுமி பத்திரமாக மீட்பு
ADDED : செப் 03, 2024 04:41 AM
ஓசூர்: கர்நாடகா மாநிலம், சர் எம்.விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, காரைக்கால் (16529) செல்லும் பயணிகள் ரயில் நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று, பின் புறப்பட்டது. ரயிலில் இருந்து இறங்கிய, 5 வயது சிறுமி, 2வது பிளாட்பாரத்தில் தனி-யாக நின்றிருந்தார். அவரிடம் ரயில்வே எஸ்.ஐ., கோதண்ட
பாணி மற்றும் போலீசார் விசாரித்தனர். தன் தாய் மேரி, காரைக்கால் ரயிலில் செல்வதாக கூறினார். போலீசார் அந்த ரயிலை தொடர்பு கொண்டு, சிறுமியின் தாயை கண்டறிந்து பேசினர். அவர் பெரிய நாகதுணை ரயில்வே ஸ்டேஷனில் இறங்-கினார். அதற்குள் ரயில்வே போலீசார், ஓசூர் அண்ணாமலை நகரி-லுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஆதரவற்றோர் தங்கும் இல்-லத்தில், சிறுமியை ஒப்படைத்தனர். அங்கு சென்ற சிறுமியின் தாய் மேரி, தந்தை சாம்சன் ஆகியோரிடம் உரிய பரிசோதனைக்கு பின் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், சிறுமியின் தாய் மேரி, நாக-மங்கலத்திலுள்ள மாதா கோவிலுக்கு ரயிலில் சென்றதும், பெரிய நாகதுணை ஸ்டேஷன் என நினைத்து, ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில் சிறுமியுடன் இறங்கியவர், அவசரத்தில் சிறுமியை விட்டு விட்டு ரயிலில் ஏறியதும் தெரிந்தது. அவர்கள், பெங்க-ளூரு பழைய பாகலுார் லேஅவுட் புலிகேசி நகரில் வசிக்கின்-றனர்.