/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆற்றில் குளித்த 9ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி
/
ஆற்றில் குளித்த 9ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி
ஆற்றில் குளித்த 9ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி
ஆற்றில் குளித்த 9ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி
ADDED : மே 04, 2024 07:48 AM
பள்ளிப்பாளையம் : பட்லுார் ஆற்றில், நண்பர்களுடன் குளிக்க சென்ற, 9ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலியானார். மொளசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு அருகே, நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த தங்கவேல் மகன் ரதிஸ், 16. லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு பள்ளிப்பாளையம் அருகே, பட்லுார் ஆற்றில் குளிப்பதற்காக ரதிஸ் தன் நண்பர்களுடன் சென்றார். அங்கு நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென, ரதிஸ் தண்ணீரில் மூழ்கினார். இதையறிந்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், ரதிஸ் ஆற்றில் மூழ்கினார். தகவலறிந்த மொடக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பல மணி நேரம் தேடுதலுக்கு பின், ரதிசை சடலமாக மீட்டனர். மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்