/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கல்லுாரி மாணவ, மாணவிகள் மனித சங்கிலி
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கல்லுாரி மாணவ, மாணவிகள் மனித சங்கிலி
100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கல்லுாரி மாணவ, மாணவிகள் மனித சங்கிலி
100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கல்லுாரி மாணவ, மாணவிகள் மனித சங்கிலி
ADDED : மார் 22, 2024 02:07 AM
நாமக்கல்;நாமக்கல் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ள பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல், லத்துவாடியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தலைமை வகித்தார்.
கல்லுாரி முன் நாமக்கல் சாலை, மோகனுார் சாலையில், வரிசையாக மாணவ, மாணவிகள் கைகோர்த்து நின்று, அனைவரும், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, ஓட்டுப்போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு, முதல் முறை ஓட்டு போடுபவர்கள் மற்றும் அனைத்து வாக்காளர்களும், தங்கள் ஓட்டுகளை தவறாமல் செலுத்த வேண்டும். ஓட்டு போடுவது நமது உரிமை
என்பதை மறக்கக்கூடாது. என கூறப்பட்டது.
செய்தி- மக்கள் தொடர்பு துறை சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா துவக்கி வைத்தார். இந்த வாகனம், நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று, தேர்தல் ஆணையம் வெளியிட்ட விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் செய்திகளை வாக்காளர்களுக்கு ஒளிபரப்பும். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்ஞாரி முதல்வர் ராஜா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

