/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீர்நிலையை மறைத்த வருவாய்த்துறை காதில் பூ சுற்றி நுாதன ஆர்ப்பாட்டம்
/
நீர்நிலையை மறைத்த வருவாய்த்துறை காதில் பூ சுற்றி நுாதன ஆர்ப்பாட்டம்
நீர்நிலையை மறைத்த வருவாய்த்துறை காதில் பூ சுற்றி நுாதன ஆர்ப்பாட்டம்
நீர்நிலையை மறைத்த வருவாய்த்துறை காதில் பூ சுற்றி நுாதன ஆர்ப்பாட்டம்
ADDED : மே 20, 2024 02:13 AM
நாமக்கல்: மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
வளையப்பட்டி கஸ்துாரி மலையில் இருந்து, மழை காலங்களில் உருவாகும் காட்டாறு, வளையப்பட்டி வழியாக செல்கிறது. இந்த நீரினால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில், வாய்க்காலின் குறுக்கே, 18 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 2 ஏரிகளும் உள்ளன.
இந்நிலையில், இப்பகுதியில், 'சிப்காட்' அமைப்பதற்கான நில வரைபடத்தில், நீர் நிலைகள் உள்ளதை மறைத்து அதிகாரிகள் அரசு அனுமதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது. வருவாய் துறையினரை கண்டித்து, காதில் பூ சுற்றி நுாதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல்லில் நடந்தது.
விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நில வரைபடத்தில், நீர் நிலைகள் உள்ளதை மறைத்து அரசுக்கு அனுப்பிய வருவாய் துறையினரை கண்டித்து கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள் பழனிவேல், சரவணன், தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.

