/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவி 'கேன்' கழன்றதால் நீரில் மூழ்கி பலி
/
நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவி 'கேன்' கழன்றதால் நீரில் மூழ்கி பலி
நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவி 'கேன்' கழன்றதால் நீரில் மூழ்கி பலி
நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவி 'கேன்' கழன்றதால் நீரில் மூழ்கி பலி
ADDED : மே 01, 2024 01:38 PM
மல்லசமுத்திரம்: மாமுண்டி கிராமத்தில் தாய், தங்கையுடன் கிணற்றில் நீச்சல் பழக சென்ற, 8ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து பரிதாபமாக பலியானார்.
மல்லசமுத்திரம் அருகே, மாமுண்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராசு, 45; கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமுதா, 37. தம்பதியருக்கு, மகன் ரஞ்சித், 16, மகள்கள் பிருந்தா, 14, சாலினி, 10, என, மூன்று குழந்தைகள். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, தாய் அமுதா மற்றும் மூத்த மகள் பிருந்தா, இளைய மகள் சாலினி ஆகியோர், அருகிலிருந்த விவசாய கிணற்றில் நீச்சல் பழகி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த கிணற்றின் உரிமையாளர், காட்டிற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும், கிணற்றில் இருந்து மேலே வாருங்கள் என, தெரிவித்துள்ளார். மூவரும் கிணற்றுக்கு மேலே வந்தனர். பிருந்தா மீண்டும் நீச்சல் அடிக்க வேண்டும் என்ற ஆசையில், திடீரென கிணற்றில் குதித்துள்ளார். அந்த சமயம், பிருந்தாவின் முதுகில் கட்டியிருந்த பிளாஸ்டிக் கேன் கழன்றது. இதனால், நீச்சல் தெரியாத பிருந்தா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின், அருகிலிருந்தவர்கள் கிணற்றில் குதித்து, பிருந்தாவின் சடலத்தை மீட்டனர். பிருந்தா, மாமுண்டியில் உள்ள அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.