ADDED : மே 01, 2024 01:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துார் யூனியனில், 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் சோளத்தட்டு சாகுபடி செய்யப்படுகிறது. கால்நடைகளுக்கு முக்கிய தீவனமாக இந்த சோள தட்டுகளை பயன்படுத்துகின்றனர். வெண்ணந்துார், அளவாய்பட்டி, நடுப்பட்டி, அத்தனுார் மற்றும் தேங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சோளத்தட்டுகள் கருகி விட்டதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணற்றில் மற்றும் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், தண்ணீரின்றி சோளத்தட்டுகள் கருகி விடுவதாகவும், இதனால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.