/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேர்தல் போலீஸ் பார்வையாளர் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு
/
தேர்தல் போலீஸ் பார்வையாளர் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு
தேர்தல் போலீஸ் பார்வையாளர் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு
தேர்தல் போலீஸ் பார்வையாளர் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு
ADDED : மார் 29, 2024 01:13 AM
நாமக்கல்:நாமக்கல் லோக்சபா தேர்தல், வரும் ஏப்., 19ல் நடக்கிறது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (எஸ்.சி.,), சேந்தமங்கலம் (எஸ்.டி.,), நாமக்கல், ப.வேலுார், குமாரபாளையம் ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகளில், தலா, மூன்று என, மொத்தம், 18 தேர்தல் பறக்கும் படை, 18 நிலையான கண்காணிப்புக்குழு, 6 வீடியோ கண்காணிப்பு என, மொத்தம், 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினர், சுழற்சி முறையில், தொகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கம், 10,000 ரூபாய்க்கு மேல் பரிசு பொருட்கள் எவ்வித ஆவணமும் இன்றி எடுத்து செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல் லோக்சபா தேர்தலில், போலீஸ் பார்வையாளராக உஷாராதா என்பவரை, தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர், நேற்று காலை, மோகனுார் - வாங்கல் காவிரி ஆற்று பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வாகனங்களை சோதனை செய்வதற்காக பராமரிக்கப்படும் பதிவேடுகள், கணினி பதிவு உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், இன்ஸ்பெக்டர் சவிதா உள்பட பலர் பங்கேற்றனர்.

