ADDED : ஆக 11, 2024 02:24 AM
நாமக்கல்;மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத மூன்று குற்றவியல் சட்ட நகல் எரிக்கும் போராட்டம், நாமக்கல்லில் நடந்தது. எல்.பி.எப்., மாவட்ட கவுன்சில் செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லோக்சபாவில் விவாதிக்காமல், சட்ட வல்லுனர்களை கலந்தாலோசிக்காமல், உழைப்பாளர் மக்களுக்கு எதிரான மூன்று சட்டத்தை திரும்ப பெறவேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தையும் வாபஸ் வாங்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முன்னதாக, தேசியக்கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

