sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பதிவு செய்த, பதிவு செய்யாத கரும்பை தனியார் ஆலைக்கு விற்றால் நடவடிக்கை

/

பதிவு செய்த, பதிவு செய்யாத கரும்பை தனியார் ஆலைக்கு விற்றால் நடவடிக்கை

பதிவு செய்த, பதிவு செய்யாத கரும்பை தனியார் ஆலைக்கு விற்றால் நடவடிக்கை

பதிவு செய்த, பதிவு செய்யாத கரும்பை தனியார் ஆலைக்கு விற்றால் நடவடிக்கை


ADDED : ஜூன் 29, 2024 02:21 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: 'சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத கரும்பை தனியார் ஆலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆலை செயலாட்சியர் மல்லிகா எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் அமைந்துள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2024-25ம் ஆண்டு அரவை பருவத்திற்கு, 2,400 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு, ஒரு லட்சம் டன்கள் என்றளவில், வரும் நவ., இரண்டாம் வாரத்தில் அரவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த, 2023-24ம் ஆண்டிற்கான அரவை பருவத்தில், கரும்பு சப்ளை செய்த விவசாயிகள் அனைவருக்கும், கிரயத்தொகை நிலுவை இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யாத கரும்பை, ஆலையின் விதிகளுக்கு புறம்பாக எடுத்து செல்ல சில இடைத்தரகர்கள், வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இது சட்டப்படி குற்றம்.

அதனால், ஆலைக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதுடன், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். அதனால், சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்த, பதிவு செய்யாத கரும்பை முறைகேடான வகையில் வெளிச்சந்தையிலோ அல்லது வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கோ விற்பனை செய்வதாக, மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆலை நிர்வாகத்திற்கும் புகார்கள் வரும் பட்சத்தில், முறைகேடுகளில் ஈடுபடும் இடைத்தரகர்கள், வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் மீது கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆலையின் விவகார பகுதிக்கு உட்பட்ட பதிவு செய்யாத கரும்பை எடுத்து செல்பவர்கள், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக அனுமதி மற்றும் தடையில்லா சான்று பெறவேண்டும். அதன் பிறகே, தங்களது வாகனங்களில் கரும்பை ஏற்றி செல்லவேண்டும்.

அவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்களை போலீசார் மற்றும் போக்குவரத்து துறை மூலம் பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாய சங்கத்தினர், தங்களது பதிவில்லா கரும்பை பதிவு செய்து, 2024-25ம் ஆண்டு கரும்பின் குறைந்தபட்ச ஆதார விலையான, 3,151 ரூபாயை டன் மற்றும் தமிழக அரசின் கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை பெற்று கொள்ளலாம். இதர கோரிக்கைகளை, 94899 00202, 94899 00208 என்ற மொபைல் போனில் தொடர்பு கொண்டு, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தெரியப்படுத்தவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us