/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முனியப்பன் கோவிலில் ஆடித்திருவிழா கோலாகலம்
/
முனியப்பன் கோவிலில் ஆடித்திருவிழா கோலாகலம்
ADDED : ஆக 06, 2024 01:57 AM
குமாரபாளையம், குமாரபாளையம் - சேலம் சாலை, சரவணா தியேட்டர் எதிரே முனியப்பன் கோவில் அமைந்துள்ளது.
இங்கு, ஆண்டுதோறும் ஆடித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு, விநாயகர் பூஜை, கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. உலக நன்மை வேண்டி யாகவேள்வி நடத்தப்பட்டது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் அர்ச்சகர் சுவாமிநாத சிவாச்சாரியார், பவானி, பழனியாண்டவர் கோவில் அர்ச்சகர் ஸ்த்யோஜாத வேத சங்கர சிவாச்சாரியார் நடத்தினர். கோவிலில் உள்ள ராஜகணபதி, முனியப்ப சுவாமி, கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சுவாமிகளுக்கு பவானி சங்கமேஸ்வரர் கோவில் முக்கூடலிலிருந்து மேளதாளம் முழங்க புனிதநீர் எடுத்து வந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.