/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பயிர்களில் பூக்கும் திறன் அதிகரிக்க ஆலோசனை
/
பயிர்களில் பூக்கும் திறன் அதிகரிக்க ஆலோசனை
ADDED : ஏப் 21, 2024 02:14 AM
நாமகிரிப்பேட்டை:பயிர்களில் பூக்கும் திறனை அதிகரிக்க வேளாண்துறை ஆலோசனை வழங்கி உள்ளது.
நாமகிரிப்பேட்டை
வட்டார பகுதியில், 'பயிர்களில் பூக்கும் திறன் குறைவாக
இருப்பதாகவும்; இதை இயற்கை முறையில் தீர்க்க என்ன செய்ய வேண்டும்' என
விவசாயிகள் கேட்டிருந்தனர். இதுகுறித்து, நாமகிரிப்பேட்டை
வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இளநீர் மற்றும் மோர்
கரைசலை தயார் செய்ய வேண்டும். இளநீர், 300 மில்லி, மோர், 500 மில்லி
கலந்து கொள்ள வேண்டும். இதை, 10 முதல் 15 லிட்டர் தண்ணீரில் கலந்து
கொள்ள வேண்டும். ஏக்கருக்கு, 10 முதல் 15 லிட்டர் என்றளவில் பாசன
நீரில் கலந்து தெளிக்கலாம்.
இதை தெளிப்பதன் மூலம் பல்வேறு பலன்கள்
நேரடியாக கிடைக்கும். தாவர வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது.
பயரில் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
உதவுகிறது. பயரிகளில் பூக்கும் திறனை அதிகரிக்கிறது. இதன் மூலம்
விவசாயிகள் அதிக மகசூல் பெற முடியும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.

