/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துவரை, உளுந்து விதைகளை கடினப்படுத்த ஆலோசனை
/
துவரை, உளுந்து விதைகளை கடினப்படுத்த ஆலோசனை
ADDED : ஆக 05, 2024 02:09 AM
ராசிபுரம், ராசிபுரம் வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உளுந்து, துவரை விதைகளை கடினப்படுத்துவது அவசியம். விதைகளை கடினப்படுத்த, 100 மில்லி கிராம் ஜிங்க்சல்பேட் உப்பை, ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து கரைசல் தயாரிக்க வேண்டும். அதில், 350 மி.லி., கரைசலை எடுத்துக்கொண்டு, ஒரு கிலோ விதையை கலந்து, மூன்று மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்த வேண்டும். பழைய ஈரப்பதத்திற்கு விதையை உலர்த்தி விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
இதேபோன்று, பாசிப்பயறுக்கு, 100 மி.கி., மாங்கனீஸ் சல்பேட் உப்பினால் ஆன கரைசலில் விதைகளை மேற்கூறியது போல, மூன்று மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் பழைய ஈரப்பதத்திற்கு உலர்த்தி விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான துவரை, உளுந்து விதைக்கு, 300 மி.கி., ஜிங்க் சல்பேட், பாசிப்பயறுக்கு, 300 மி.கி., மாங்கனீஸ் சல்பேட் எடுத்து, 3 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைகளை கடினப்படுத்தி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.