/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆலாம்பாளையம் டவுன் பஞ்., இ.ஓ., ரூ.25 லட்சம் மோசடி
/
ஆலாம்பாளையம் டவுன் பஞ்., இ.ஓ., ரூ.25 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 27, 2024 02:00 AM
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,ல், 2021 அக்., 3 முதல் கிருஷ்ணவேணி, 53, என்பவர் செயல் அலுவலராக உள்ளார். காசோலைகளில் கையெழுத்திட அவருக்கு அதிகாரம் உண்டு.
இந்நிலையில், 2022ல் கிருஷ்ணவேணி மற்றும் சிலர் டவுன் பஞ்., நிதியை முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. டவுன் பஞ்., பகுதிகளில் எந்த வேலையும் செய்யாமல், செந்தில்குமார் என்பவருக்கு, 2.19 லட்சம் ரூபாய்; ராம்குமார் என்பவருக்கு, 1.85 லட்ச ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு, 25 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயல் அலுவலர் கிருஷ்ணவேணி உட்பட சிலர் மீது வழக்குப் பதிய, தமிழக டவுன் பஞ்., இயக்குனர் அனுமதி அளித்துள்ளார்.
இதையடுத்து, அவர்கள் மீது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சுபாஷினி, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.