/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.30 லட்சத்தில் 'அம்மா' பூங்கா புதர் மண்டி கிடப்பதால் வீண்
/
ரூ.30 லட்சத்தில் 'அம்மா' பூங்கா புதர் மண்டி கிடப்பதால் வீண்
ரூ.30 லட்சத்தில் 'அம்மா' பூங்கா புதர் மண்டி கிடப்பதால் வீண்
ரூ.30 லட்சத்தில் 'அம்மா' பூங்கா புதர் மண்டி கிடப்பதால் வீண்
ADDED : ஜூன் 19, 2024 01:44 AM

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி பஞ்சாயத்தில், கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், 'அம்மா' பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டது. 2018ல் இந்த பூங்கா, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
பிரதான சாலையில் இருந்து பூங்காவிற்கு வர, 2 லட்சம் ரூபாயில் தனியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பூங்கா திறந்த நிலையில், சிறிது நாட்கள் மக்கள் ஆர்வமாக உடற்பயிற்சிக் கூடத்திற்கும், பூங்காவிற்கும் வந்து சென்றனர்.
ஆனால், பூங்காவை பராமரிக்க போதுமான திட்டமும், நிதியும் இல்லாததால், பூங்காவும், உடற்பயிற்சிக் கூடமும் கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வந்தன.
தற்போது, பூங்கா முழுதும் எருக்கன் செடியும், முட்செடிகளும் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. அதேபோல், உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து விட்டன. சில பொருட்களை களவாடி சென்று விட்டனர். இதனால், அந்த பூங்காவை மக்கள் மறந்துவிட்டனர்.
கடந்த, 6 ஆண்டுகளில் எந்த பராமரிப்பும் இல்லாததால், 30 லட்சம் ரூபாய் வீணாகியுள்ளது. இதைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
எனினும், இந்த பூங்காவை புனரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு விட, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.