/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை இருளில் மூழ்கடிக்கும் போராட்டம் அறிவிப்பு
/
தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை இருளில் மூழ்கடிக்கும் போராட்டம் அறிவிப்பு
தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை இருளில் மூழ்கடிக்கும் போராட்டம் அறிவிப்பு
தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை இருளில் மூழ்கடிக்கும் போராட்டம் அறிவிப்பு
ADDED : ஜூன் 13, 2024 02:14 AM
நாமக்கல்:''தொடர்ந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவிற்கு, மின் தடை செய்து, தொழில் நிறுவனம் செயல்படாமல் இருளில் மூழ்கடிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என,உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி கூறினார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக விவசாயிகள் நலன் கருதி, தமிழக அரசு குறுவை சாகுபடி செய்ய, காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டு தோறும், ஜூன், 12ல், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.தற்போது, மேட்டூர் அணை நீர்மட்டம், 43 அடியாக சரிந்துள்ளது.
இதனால், தற்போது குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு இல்லாமல், 6லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பாசன விளை நிலங்கள், விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு, கர்நாடக மாநிலத்தில் உள்ள அதன் கூட்டணி கட்சியிடம் சுமுக பேச்சுவார்தை நடத்தி, நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர முன்வராமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு மவுனம் காப்பது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகம்.
கர்நாடகா அரசு, மேகதாதுவிலும், ஆந்திர அரசு, பாலாற்றிலும், கேரளா அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கேயும் அணை கட்டும் பணியை துவங்கி உள்ளனர்.
தமிழகத்தை சுற்றியுள்ள பக்கத்து மாநிலஅரசுகள், தமிழகத்திற்கு தண்ணீர் வரும் நீராதாரங்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்வதை, தமிழகமுதல்வர் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது, விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மத்திய பா.ஜ., அரசு, மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பதவியை, கர்நாடகா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்துள்ளது. இது, தமிழகத்திற்கு செய்யும்துரோகம். அதனால், பா.ஜ., நீர்வளத்துறை இணை அமைச்சரை மாற்றவேண்டும்.
கர்நாடக அரசு, தொடர்ந்து தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை ஒரு சொட்டு கூட தர மாட்டோம் என, வீர வசனம் பேசினால், தமிழக விவசாயிகளை ஒன்றிணைத்து, கர்நாடகத்திற்கு தமிழகத்தில் உற்பத்தி செய்து மின்சாரம் செல்லும் மின் கம்பியை அறுத்து,கர்நாடகாவிற்கு மின் தடை செய்து தொழில் நிறுவனம் செயல்படாமல் இருளில் கர்நாடகாவை மூழ்கடிக்கும் போராட்டத்தில்ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கூறினார்.

