/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பாராட்டு
/
பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பாராட்டு
பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பாராட்டு
பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 10, 2024 02:30 AM
எருமப்பட்டி;எருமப்பட்டி, ஆக்ஸ்போர்டு பள்ளியில் பிளஸ் 2 பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் சமீபத்தல் வெளியானது.
இதில், எருமப்பட்டி ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில், ஏ.நஸ்ரின் 579 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் இடத்தையும், பி.வர்ஷினி என்ற மாணவி 572 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், கே.சுவேதா 568 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும், பள்ளியில் தேர்வு எழுதிய 85 மாணவர்களில் 600க்கு 550 மதிப்பெண்களுக்கு மேல் 7 மாணவர்களும், 500க்கு மேல் 10 பேரும், 450க்கு மேல் 14 பேரும், 400க்கு மேல் 21மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயம் பள்ளிகளின் தாளாளர் ராஜீ, பள்ளி செயலாளர் சுரேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.