/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கலை நிகழ்ச்சியில் போலீசாரிடம் வாக்குவாதம்
/
கலை நிகழ்ச்சியில் போலீசாரிடம் வாக்குவாதம்
ADDED : ஆக 05, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளைம், கண்ண னுார் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, கோவில் அருகே கலை நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை அனுமதி வழங்கினர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கலை நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. பள்ளிப்
பாளையம் போலீசார் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்று, அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. நிகழ்ச்சியை நிறுத்துங்கள் என, தெரிவித்தனர். அப்போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் சவுண்ட் சிஸ்டத்தை அணைத்தவுடன், கூட்டம் கலைந்து சென்றது.