/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம் தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு
/
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம் தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம் தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு
கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம் தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு
ADDED : மார் 06, 2025 03:39 AM
நாமக்கல்: கிறிஸ்தவர்களின், 40 நாட்கள் தவக்காலம், நேற்று துவங்கி-யதை அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில், சாம்பல் புதன் பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர்.
இயேசு கிறிஸ்து, வனாந்தரத்தில் நோன்பு இருந்த, 40 நாட்-களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்-பார்கள். இது தவக்காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என, அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில், கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து தம்மை தாமே வெறுத்து, தங்களுக்கு பிடித்த காரியங்-களை தவிர்த்து, இயேசுவை தியானிப்பார்கள். உணவு, உடைகள் ஆகியவற்றில் அலங்காரங்களை தவிர்த்து, பிறருக்கு உதவி செய்து ஆன்மிக வலிமையை இக்கால கட்டத்தில் பெறுவர்.
கடந்தாண்டு குருத்தோலை ஞாயிறு அன்று, கிறிஸ்தவர்கள் ஊர்-வலமாக எடுத்து சென்ற குருத்தோலைகள் எரித்து சாம்பலாக்கப்-பட்டு வைக்கப்படிருந்தது. அந்த சாம்பல், நேற்று திருப்பலியில் வைத்து பிரார்த்தனை செய்து, நெற்றியில் சிலுவை அடையாள-மாக பூசப்பட்டது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களில், நேற்று காலை, சிறப்பு பிரார்த்-தனை நடந்தது. நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், பங்கு தந்-தையும், சலேசிய குரு அருட்தந்தை பரத் தலைமையில், சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதில், திருத்தொண்டர் அஜித்குமார் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
மோகனுார் அடுத்த ஆர்.சி.பேட்டப்பாளையத்தில் உள்ள புனித செசிலீ ஆலயத்தில், பங்கு தந்தை ஜான்போஸ்கோ தலை-மை யில், சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, ஆறு வெள்ளிக்-கிழமை சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்படும் அந்த நாட்-களை நினைவு கூர்ந்து புனிதவாரம் அனுசரிக்கப்படுகிறது. பெரிய வியாழன், புனித வெள்ளியை தொடர்ந்து, இயேசு உயிர்த்-தெழுந்த ஈஸ்டர் பண்டிகை, வரும், ஏப்., 20-ல் கொண்டாடப்ப-டுகிறது.