/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
/
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
ADDED : ஜூலை 06, 2024 08:16 AM
ராசிபுரம்: ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்வது குறித்து, எம்.பி., ராஜேஸ்குமார் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம், நேற்று நடந்தது.
இதில், வணிகர் சங்கம், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், துணிக்கடை உரிமையாளர்கள் சங்கம், ரோட்டரி சங்கம் உள்பட பல்வேறு சங்கத்தினர் கருத்துகளை தெரிவித்தனர்.தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பரந்தாமன் கூறுகையில், ''புதிய பஸ் ஸ்டாண்ட் அமைவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், சேலம் சாலை, கடைவீதி, நாமக்கல் சாலை, கோனேரிப்பட்டி சாலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணி செய்ய வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள பஸ் ஸ்டாண்டை நகர பஸ் ஸ்டாண்டாக மாற்றம் செய்த பின், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமார் பேசுகையில், ''புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பது தொடர்பாக அனைத்து மக்களிடம் கருத்து கேட்கப்படும். முதற்கட்டமாக வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டுள்ளோம். பஸ் ஸ்டாண்ட் அமைக்க, 7 முதல், 10 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ராசிபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் நிலம் இல்லாததால், பொதுமக்கள் யாரேனும் பட்டா நிலத்தை அரசுக்கு வழங்க முன் வரலாம்,'' என்றார்.