/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகளிர் கல்லுாரியில் பேரவை துவக்க விழா
/
மகளிர் கல்லுாரியில் பேரவை துவக்க விழா
ADDED : செப் 05, 2024 02:44 AM
நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டிற்கான பேரவை துவக்க விழா, நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். சென்னை, தமிழ்நாடு கல்லுாரி முன்னாள் கல்வி இயக்குனர் சேகர், கல்லுாரி பேரவையை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து, பேரவை தலைவராக கனிமொழி, -துணைத்தலைவராக சுசிமதி, செயலாள-ராக மேனஷா, துணை செயலாளராக பிரியதர்ஷினி, பொருளாள-ராக அபிநயா, விளையாட்டு செயலராக சவுனிதா, நுண்கலை மன்ற செயலராக சபிதா, கட்செவி புல செயலராக பிரவீணா, முது-நிலை பேரவை தலைவராக நிரஞ்சனி, முதுநிலை பேரவை துணை செயலராக குணவதி ஆகியோர் பதவியேற்றுக்கொண்-டனர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்றனர். வேதியியல் துறைத்தலைவர் சக்திவேல், பேராசிரியர்கள், மாணவியர், அலுவலக பணியா-ளர்கள் பங்கேற்றனர்.