ADDED : ஆக 17, 2024 02:30 AM
மோகனுார்;கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சமுதாய அறக்கட்டளை சார்பில், நாமக்கல் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற, எம்.பி., மாதேஸ்வரனுக்கு பாராட்டு விழா, நலிவடைந்தோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, தோப்பூர் கொங்கு திருமண மண்டபத்தில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் இளங்கோ, பொருளாளர் நவலடி, ஒருங்கிணைப்பாளரும், மோகனுார் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளருமான பெ.நவலடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொங்கு பேரவை தலைவர் தேவராஜ் வாழ்த்தி பேசினார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் ஏற்புரையாற்றினார். தொடர்ந்து, பொருளாதாரத்தில் நலிவடைந்த குமரிபாளையத்தை சேர்ந்த தர்னேஷ், ஓடப்பாளையத்தை சேர்ந்த விஜயன், மணியங்காளிப்பட்டியை சேர்ந்த சரவணன் ஆகியோருக்கு, தலா, 25,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அறக்கட்டளை துணைத்தலைவர் சக்திவேல், துணை செயலாளர் ராஜாகண்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் வரதராஜன், தங்கவேலு, பழனிமலை, செந்தில்குமரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.