/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆவின் பால் பாக்கெட்டில் தேர்தல் நாள் தினமும் 3 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு

ADDED : ஏப் 18, 2024 01:17 AM
நாமக்கல், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் தினமும், மூன்று லட்சம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தேர்தல் நாள் குறித்து அச்சிடப்பட்ட ஆவின் பால் விற்பனையை, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா துவக்கி வைத்தார்.
லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் ஓட்டுப்போட தகுதியுடைய அனைவரும், 100 சதவீதம் ஓட்டளிப்பதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று முதல் மூன்று நாட்கள், தினமும் மூன்று லட்சம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆவின் நிறுவனம் சார்பில் பால் பாக்கெட்டுகளில் தேர்தல் நாள் அச்சிட்டு, 1.50 லட்சம் குடும்பங்களை சென்றடையும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் உமா, நாமக்கல் பூங்கா சாலை ஆவின் பாலகத்தில் துவக்கி வைத்தார்.
மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, ஆவின் பொது மேலாளர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.