/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுாரில் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு
/
ப.வேலுாரில் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு
ப.வேலுாரில் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு
ப.வேலுாரில் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : மே 29, 2024 01:38 AM
ப.வேலுார்:ப.வேலுாரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், 43,000 ரூபாயை திருடிச் சென்றனர். இச்சம்பவம், டாஸ்மாக் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் அருகே, பொய்யேரி கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கண்காணிப்பாளராக துரைசாமி, 49, செல்வராஜ், 48, விற்பனையாளராக கரிகாலன்குமார், 47, மணி, 48, ஆகியோர் வேலை செய்கின்றனர்.
கடந்த 26ம் தேதி இரவு 11:00 மணிக்கு கடையை பூட்டிவிட்டுச் சென்றனர். நேற்று முன் தினம் காலை 6:00 மணிக்கு அந்த வழியாக சென்றவர்கள், டாஸ்மாக் கடை திறந்து கிடப்பதாக, டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் துரைசாமிக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர், ப.வேலுார் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் போலீசார் வந்தனர். கடைக்குள் வைத்திருந்த, 43,000 ரூபாய் பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.