/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செல்வ மாரியம்மனுக்கு பாலாலய விழா
/
செல்வ மாரியம்மனுக்கு பாலாலய விழா
ADDED : செப் 06, 2024 01:44 AM
செல்வ மாரியம்மனுக்கு
பாலாலய விழா
ப.வேலுார், செப். 6-
நாமக்கல் மாவட்டம், நல்லுார் அருகே பெரிய சூரம்பாளையம் கிராமத்தில் செல்வ மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான இந்த கோவிலை, புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் மக்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு மங்கள இசையுடன் பாலாலய விழா தொடங்கியது. மகா கணபதி வழிபாட்டை தொடர்ந்து சாந்தி ஹோமம் நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. பின் காவேரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்து செல்வ விநாயகர், செல்வ மாரியம்மன், பகவதி அம்மன், மதுரை வீரனுக்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிவாச்சாரியார்கள் பாலாலய விழாவை முன்னின்று நடத்தினர்.