/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் கொண்டாட்டம்
/
இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 08, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, ராஜராஜன் நகரில் சுதந்திர போராட்ட தியாகி இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா, விடியல் ஆரம்பம் அமைப்பு சார்பில் நடந்தது. அதன் அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார்.
தொடர்ந்து, இரட்டைமலை சீனிவாசன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இரட்டைமலை சீனிவாசன் வரலாற்றை மாணவ, மாணவியரும் அறியும் வகையில், பேச்சு, கட்டுரை, வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.