/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மலைவாழ் மக்களுடன் பா.ஜ.,வினர் கலந்துரையாடல்
/
மலைவாழ் மக்களுடன் பா.ஜ.,வினர் கலந்துரையாடல்
ADDED : ஆக 05, 2024 02:06 AM
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த போதமலை மலைவாழ் மக்களுடன், பா.ஜ., நிர்வாகிகள் கலந்துரையாடினர்.
ராசிபுரம் அடுத்த போதமலையில், மேலுார், கீழூர், கிடமலை என, 3 மலைக்கிராமங்கள் உள்ளன. தற்போது, இந்த கிராமங்களுக்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பா.ஜ.,வின் போதமலை கிளை தலைவர் ராஜா தலைமையில் நிர்வாகிகள் மலைவாழ் மக்களுடன் கலந்துரையாடினர். பெண்கள், ஆண்கள் என, 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பிரதமர் செய்து வரும் திட்டங்கள் குறித்து விளக்கினர்.
மேலும், போதமலை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை கேட்டறிந்தனர். மேலும், அவர்களுக்கு தற்போது என்ன பிரச்னைகள், உடனடியாக தேவைப்படும் உதவி, தீர்க்க வேண்டிய பிரச்னைகள் குறித்து குறிப்பெடுத்தனர்.
பா.ஜ., மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவின் மாநில துணைத்தலைர் லோகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.