/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறப்பு மண் பரிசோதனை முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு
/
சிறப்பு மண் பரிசோதனை முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு
சிறப்பு மண் பரிசோதனை முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு
சிறப்பு மண் பரிசோதனை முகாம் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 26, 2024 02:59 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:
திருச்செங்கோட்டில், வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம், கிராமங்க-ளுக்கு சென்று விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீர் மாதிரி-களை பெற்று, ஆய்வு செய்து மண் வள அட்டை அன்றைய தினமே வழங்கப்பட்டு வருகிறது.
நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் இந்-தாண்டு இதுவரை, 14 முகாம் நடத்தி, 465 மண்மாதிரி, 141 நீர் மாதிரி ஆய்வு செய்து முடிவுகள் மண்வள அட்டையாக வழங்கப்-பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்கு மண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. முகாம் காலை, 9:00 மணிக்கு தொடங்கும். ஆக., 8ம் தேதி திருச்செங்கோடு தேவனாங்குறிச்சியிலும், 14ல் வெண்ணந்துார் ஒன்றியம் அலவாய்பட்டியிலும், 21ல், சேந்தமங்-கலம் ஒன்றியம் பேளுக்குறிச்சியிலும், 28ம் தேதி எலச்சிப்பா-ளையம் ஒன்றியம் அகரத்திலும் பரிசோதனை முகாம் நடக்கிறது.
மேலும், விவசாயிகள் மண்மாதிரி, நீர் மாதிரிகளை நாமக்கல், வசந்தபுரத்தில் உள்ள மண்பரிசோதனை நிலையம் மற்றும் திருச்-செங்கோடு, நாராயணம்பாளையத்தில் உள்ள நடமாடும் மண்பரி-சோதனை நிலையத்தில் வழங்கி, ஆய்வு செய்து மண்வள அட்டை பெறலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.