ADDED : ஆக 05, 2024 02:08 AM
குமாரபாளையம், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் தேவராஜ், 35; இவர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவியரை, 'டாடா சுமோ' காரில், கடந்த, 1ல் ஏற்றிக்கொண்டு, கள்ளக்குறிச்சியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
குமாரபாளையம் அருகே, சேலம் - கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம் தனியார் கல்லுாரி அருகே சென்றுகொண்டிருந்த போது, கார் டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மாணவியர் தர்சினி, 17, மகேஸ்வரி, ௧௮, சாதனா, 17, ஆர்த்தி, 18, சபீனா, 18, கிருஷ்ணவேணி, 17, உஷாராணி, 17, சகுந்தலா, 17, சாருலதா, 18, செண்பகவல்லி, 17, டிரைவர் தேவராஜ் உள்பட, 11 பேர் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள், அவர்களை மீட்டு பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.