/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வள்ளிபுரத்தில் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு காரீப் பருவ பயிற்சி
/
வள்ளிபுரத்தில் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு காரீப் பருவ பயிற்சி
வள்ளிபுரத்தில் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு காரீப் பருவ பயிற்சி
வள்ளிபுரத்தில் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு காரீப் பருவ பயிற்சி
ADDED : ஜூலை 01, 2024 04:03 AM
நாமக்கல்: வட்டார வேளாண் துறை மூலம், வள்ளிபுரத்தில் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டு குழுவிற்கு, காரீப்பருவ பயிற்சி முகாம் நடந்தது.
நாமக்கல் வட்டார வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண் முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், வள்ளிபுரத்தில் கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு, காரீப் பருவப் பயிற்சி முகாம் நடந்தது. நாமக்கல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சித்ரா தலைமை வகித்து, வேளாண் துறையின் மானிய திட்டங்கள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், தமிழக சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், பயிர் இன்சூரன்ஸ் மற்றும் பிரதமரின் விவசாயிகளுக்கான நிதித் திட்டம் குறித்து விளக்கினார்.
கபிலர்மலை, சின்னகிணத்துப்
பாளையம் இயற்கை விவசாயி மற்றும் சிறப்பு பயிற்றுனர் லோகநாதன், இயற்கை விவசாயத்தின் நோக்கம், பயன்கள், சிறப்புகள் குறித்தும், மீன் அமிலம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், பூச்சி விரட்டி, நோய் விரட்டி தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல் பற்றியும் எடுத்துரைத்தார்.
நாமக்கல் மாவட்ட மண் ஆய்வு நிலையம், உயிரியல் கட்டுப்பாடு ஆய்வக வேளாண் அலுவலர் தரணியா, மண், நீர் மாதிரி, மண், நீர் ஆய்வின் நோக்கம், அதன் பயன்கள், உயிரியல் கட்டுப்பாடு ஆய்வகம் மூலம் வழங்கும் டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ், ஒட்டுண்ணிகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
உதவி வேளாண் அலுவலர் சதீஸ்குமார், துறை சார்ந்த மானிய
திட்டங்கள் குறித்தும், இயற்கை விவசாயி கலைவாணி, பண்ணை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் கவிசங்கர்,
ஹரிஹரன் ஆகியோர் செய்திருந்தனர்.