/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பா.ஜ., நிர்வாகியை தாக்கிய மேஸ்திரி மீது வழக்கு
/
பா.ஜ., நிர்வாகியை தாக்கிய மேஸ்திரி மீது வழக்கு
ADDED : ஜூன் 28, 2024 02:01 AM
ராசிபுரம், ராசிபுரம் பகுதியில், பா.ஜ., நிர்வாகியை தாக்கிய கட்டட மேஸ்திரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராசிபுரம், அண்ணா சாலையை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 45. இவர் இப்பகுதியில் கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் சென்டர் வைத்துள்ளார். புதுச்சத்திரம் ஒன்றிய பா.ஜ., பொதுச்செயலாளராக உள்ளார். அவரது கடைக்குள் கட்டட பராமரிப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. இப்பணியை மேஸ்திரி மதன் செய்து வருகிறார். பணியை வேகமாக முடித்து தரும்படி ராமமூர்த்தி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மதன், ராமமூர்த்தியை தாக்கியதுடன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை உடைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ராமமூர்த்தி கொடுத்த புகார்படி, ராசிபுரம் போலீசார் மதன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.