ADDED : ஆக 22, 2024 01:53 AM
திருச்செங்கோடு, ஆக. 22-
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன வளாகத்தில், பல்வேறு அமைப்புகள் சார்பில், கைத்தறி ஆடை அலங்கார அணி
வகுப்பு, தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டம் நடந்தது. கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு, நடிகை குஷ்பு பரிசு வழங்கி பாராட்டினார்.
கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களை சேர்ந்த, 27 கல்லுாரிகளில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கைத்தறி ஆடைகளை அணிந்து, ஆடை அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
பா.ஜ., தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில், ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கைத்தறி தொழிலை மேம்படுத்த, தேசிய கைத்தறி தினத்தை அறிவித்து, ஊக்கப்படுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, ஆக., 7ல் கைத்தறி தொழிலை சிறப்பிக்கும் வகையில், தேசிய கைத்தறி தினத்தை அறிவித்தார். கைத்தறி ஆடைகளின் முக்கியத்துவத்தை மாணவ, மாணவியருக்கு எடுத்து கூற வேண்டும். கைத்தறி உடைகளை அணிந்து, பாரம்பரியம் காக்க வேண்டும்,'' என்றார்.