/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கறிக்கோழி ரூ.7 சரிவு முட்டை 5 காசு உயர்வு
/
கறிக்கோழி ரூ.7 சரிவு முட்டை 5 காசு உயர்வு
ADDED : மே 31, 2024 03:07 AM
நாமக்கல்: கறிக்கோழி விலை நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு, 7 ரூபாய் சரிந்தது. முட்டை விலை, 5 காசு உயர்ந்தது.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ, 140 ரூபாய் என, பிசிசி நேற்று அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ, 98 என, தென்னிந்திய கோழிப்பண்ணையாளர் சங்கம் நிர்ணயித்துள்ளது. நேற்று முன்தினம் கிலோ, 147 ரூபாயாக இருந்த பிராய்லர் கோழி விலை நேற்று ஒரே நாளில், 7 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நுகர்வு குறைந்து, உற்பத்தி அதிகரித்ததால் விலை குறைந்ததாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் முட்டை விலை, 5 காசுகள் உயர்ந்துள்ளது. நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை, 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 530 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இதை அனைத்து பண்ணையாளர்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி விலையை விட, முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என, என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (காசு) : சென்னை, 570, பர்வாலா, 425, பெங்களூரு, 570, டெல்லி, 563, ஹைதராபாத், 495, மும்பை, 570, மைசூரு, 570, விஜயவாடா, 485, ஹொஸ்பேட், 525, கோல்கட்டா, 525.