/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரூ.9.39 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
/
ரூ.9.39 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
ADDED : ஜூலை 12, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், .வேலுார் அருகே, வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வந்தனர். நேற்று, 9.30 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, 10 ஆயிரத்துக்கு, 580 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 94.59, குறைந்தபட்சமாக, 90.99, சராசரியாக, 92.97 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் ஒன்பது லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.