/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மெட்டாலாவில் காய்கறிகளை பதப்படுத்த குளிர்பதன கிடங்கு: தமிழ்மணி உறுதி
/
மெட்டாலாவில் காய்கறிகளை பதப்படுத்த குளிர்பதன கிடங்கு: தமிழ்மணி உறுதி
மெட்டாலாவில் காய்கறிகளை பதப்படுத்த குளிர்பதன கிடங்கு: தமிழ்மணி உறுதி
மெட்டாலாவில் காய்கறிகளை பதப்படுத்த குளிர்பதன கிடங்கு: தமிழ்மணி உறுதி
ADDED : ஏப் 17, 2024 12:47 PM
நா.பேட்டை: ''மெட்டாலாவில் காய்கறிகளை பதப்படுத்த குளிர்பதன கிடங்கு அமைத்து தரப்படும்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி உறுதியளித்தார்.
நாமக்கல் லோக்சபா தொகுதியின், அ.தி.மு.க., வேட்பாளர் ராஹா தமிழ்மணியின் தேர்தல் பிரசாரம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நடனமாடி ஓட்டு சேகரிப்பது, வேளாண் நிலங்களில் வேலை செய்யும் கூலித்தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது என, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியை பின்பற்றி பிரசாரம் செய்து வருகிறார். அதுபோன்று, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பேளுக்குறிச்சி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
மெட்டாலாவில் காய்கறி மண்டிகள் அதிகம் உள்ளன. காய்கறி விலை குறையும்போது, சில நாட்கள் இருப்பு வைத்து விற்க வசதியில்லை. எனவே, நான் வெற்றி பெற்றவுடன் இப்பகுதியில் காய்கறிகளை பதப்படுத்த குளிர்பதன கிடங்கு அமைப்பேன்.
அ.தி.மு.க., அரசு பெண்களுக்காக கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தி வைத்தது தான், தி.மு.க., அரசின் சாதனையாக உள்ளது. இன்று தங்கம் விற்கும் விலையில், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை அனைத்தையும் நிறுத்தி விட்டனர். இவை அனைத்தும் மீண்டும் கிடைக்க இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். உடன், மகளிர் அணி இணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சரோஜா, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் சுரேஷ்குமார், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் ரமேஷ், நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கலாவதி, சாந்தி, பேரூர் செயலாளர்கள் மணிகண்ணன், செந்தில்குமார், ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, கூட்டணி கட்சியான, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர்கள் ராமலிங்கம், விஜய் சரவணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

