/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்லுாரி மாணவி தற்கொலை வழக்கு காதலனிடம் போலீசார் விசாரணை
/
கல்லுாரி மாணவி தற்கொலை வழக்கு காதலனிடம் போலீசார் விசாரணை
கல்லுாரி மாணவி தற்கொலை வழக்கு காதலனிடம் போலீசார் விசாரணை
கல்லுாரி மாணவி தற்கொலை வழக்கு காதலனிடம் போலீசார் விசாரணை
ADDED : ஆக 22, 2024 01:51 AM
நாமக்கல், ஆக. 22-
கொல்லிமலை எடக்கல்பட்டியை சேர்ந்தவர் ராஜூ மகள் பானுப்பிரியா, 24. இவர், நாமக்கல்- திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள ராமசாமி என்பவரின் வீட்டில், 2 ஆண்டுகளாக வாடகைக்கு தங்கி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், பி.எஸ்சி., கணிதம் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
பானுப்பிரியா, நான்கு ஆண்டுகளுக்கு முன், கொல்லிமலை வாசலுார்பட்டியை சேர்ந்த ரவி என்பவரை திருமணம் செய்திருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக, 2 ஆண்டுகளுக்கு முன், இருவரும் பிரிந்து விட்டனர். இதுகுறித்த விவாகரத்து வழக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பானுப்பிரியா தங்கி இருந்த வாடகை வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் விசாரணையில், எருமப்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் விக்னேஷ், 26, பானுப்பிரியா தங்கி இருந்த அறைக்கு வந்து சென்றது தெரியவந்தது. பானுப்பிரியா, தனது சகோதரி வீட்டிற்கு சென்று வந்தபோது, விக்னேஷூடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. அதனால், அடிக்கடி விக்னேஷ் இங்கு வந்து சென்றதாக தெரிகிறது.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால் மனமுடைந்த பானுப்பிரியா தற்கொலை செய்திருக்கலாம் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விக்னேஷை பிடித்து, நாமக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.