ADDED : ஆக 17, 2024 02:16 AM
நாமக்கல்;நாமக்கல்லை சேர்ந்தவர் கமலநாதன், 60. இவர் கடந்த, 1984ம் ஆண்டு நகராட்சி நிர்வாகத்துறையில், பணிப்பார்வையாளராக பணியில் சேர்ந்தார். பதவி உயர்வு பெற்று, பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய இவர், கடந்த, ஒன்பது மாதமாக சேலம் மாநகராட்சியில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றினார். கடந்த மாதம், பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையொட்டி, நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில், கமலநாதனுக்கு பணி நிறைவு நன்றி பாராட்டு விழா நடந்தது.
எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மாமன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, கிரீன்பார்க் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சரவணன் ஆகியோர், கமலநாதனின், 40 ஆண்டுகால அரசு பணியை பாராட்டி பேசினர்.
சேலம் மண்டல நகராட்சி நிர்வாக ஆணையாளர் அசோக்குமார், ஏ.டி.எஸ்.பி., பூபதிராஜன், மாநகராட்சி பொறியாளர் சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், கொங்குநாட்டு வேளாளர் சங்க தலைவர் தேவராஜன், கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சிங்கராஜ், தமிழ்நாடு முட்டைக்கோழி மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் மற்றும் நகர பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர்.

