/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோர்ட் உத்தரவுப்படி ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத கான்ட்ராக்டருக்கு நிபந்தனை ஜாமின்
/
கோர்ட் உத்தரவுப்படி ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத கான்ட்ராக்டருக்கு நிபந்தனை ஜாமின்
கோர்ட் உத்தரவுப்படி ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத கான்ட்ராக்டருக்கு நிபந்தனை ஜாமின்
கோர்ட் உத்தரவுப்படி ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத கான்ட்ராக்டருக்கு நிபந்தனை ஜாமின்
ADDED : மே 01, 2024 01:37 PM
நாமக்கல்: நுகர்வோர் கோர்ட் உத்தரவுப்படி, இழப்பீட்டு தொகையை செலுத்த தவறிய சிவில் கான்ட்ராக்டரை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டதால், நுகர்வோர் கோர்ட்டில் சரணடைந்தார். அவருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டது.
நாமக்கல், அழகு நகரை சேர்ந்தவர் ராமசாமி மனைவி கலைவாணி, 50. இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட, 2020ல் திருச்சியை சேர்ந்த கான்ட்ராக்டர் சதீஷ்பாபு என்பவரிடம், கலைவாணி ஒப்பந்தம் செய்துள்ளார். கட்டுமான பணிக்காக, 48 லட்சம் ரூபாயை, கலைவாணியிடம் பெற்றுக்கொண்ட சதீஷ்பாபு, ஒப்பந்தப்படி வீட்டை முழுமையாக கட்டித் தரவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட கலைவாணி, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு, வழக்கு தாக்கல் செய்தவருக்கு, 30 லட்சம் ரூாபய், 4 வாரத்தில் கட்டட ஒப்பந்ததாரர் வழங்க வேண்டும் என, 2023 ஜூலையில் தீர்ப்பளித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, 4 வார காலத்திற்குள் பணத்தை செலுத்தாததால் சதீஷ்பாபுவை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என, கலைவாணி கடந்த, பிப்.,ல் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
விசாரணைக்கு பின், நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர், கான்ட்ராக்டர் சதீஷ்பாபுவை கைது செய்ய, நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்நிலையில், கட்டட ஒப்பந்ததாரர் சதீஷ்பாபு, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அடுத்த, 4 வாரத்துக்குள், 30 லட்சம் ரூபாயை, கலைவாணிக்கு வட்டியுடன் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.