/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
30 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: ரூ.9,000 அபராதம்
/
30 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: ரூ.9,000 அபராதம்
30 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: ரூ.9,000 அபராதம்
30 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: ரூ.9,000 அபராதம்
ADDED : நவ 09, 2024 01:29 AM
குமாரபாளையம், நவ. 9-
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், குமாரபாளையம் பகுதி கடைகளில் அதிகம் பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் பேக்கரி, ஓட்டல் உள்ளிட்ட கடைகளில் சோதனை நடத்தினர்.
இதில், 30 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள், ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு, 9,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. எஸ்.ஐ., சந்தானகிருஷ்ணன், சுகாதார பணி மேற்பார்வையாளர்கள் சுப்ரமணி, பரமேஸ்வரன், துாய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் கவுதம் உள்பட பலர் உடனிருந்தனர்.