/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி மும்முரம்
/
ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி மும்முரம்
ADDED : ஏப் 13, 2024 07:39 AM
மல்லசமுத்திரம் : கருங்கல்பட்டி அக்ரஹாரம் கிராமத்தில், திருமணிமுத்தாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மல்லசமுத்திரம் யூனியன், கருங்கல்பட்டி அக்ரஹாரம் கிராமத்தில் திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது மக்கள் ஆற்றைக்கடந்து செல்லமுடியாமல் அவதிக்குள்ளாவர். குறிப்பாக, மாணவர்கள் மற்றும் விவசாயிகள் செல்ல முடியாமல் பல கிலோ மீட்டர் தொலைவு சுற்றிக்கொண்டு செல்லவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
இதுகுறித்து, மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, திருமணி முத்தாற்றின் குறுக்கே ஊரக வளர்ச்சித்துறை சார்பில், நபார்டு திட்டத்தில், 434.27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

