ADDED : செப் 03, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த நாட்டாமங்கலத்தை சேர்ந்தவர் முத்தான் மகன் வாமுனி, 60. இவருக்கு சொந்தமான தகரம் வேய்ந்த கூரை-வீட்டில், நேற்று மதியம் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென கூரையில் தீ பற்றிக்கொண்டது. இதைய-றிந்த வாமுனி, வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார். உடனடி-யாக, ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்-தனர்.
அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை அணைத்-தனர். ஆனால், அதற்குள் வீட்டில் இருந்த சமையல் பொருட்கள், துணி, ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்ப-லாகின. புதுச்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.