/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கணிதம், வேதியியல் பாடங்களுக்கு கலந்தாய்வு
/
கணிதம், வேதியியல் பாடங்களுக்கு கலந்தாய்வு
ADDED : ஜூன் 25, 2024 02:04 AM
நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், 2024 -- 2025-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு, கடந்த மே, 29-ல் நடந்தது.
அதை தொடர்ந்து, முதல் கட்ட பொது கலந்தாய்வு கடந்த, 10 முதல், 14 வரை நடந்தது. இதுவரை நடந்த கலந்தாய்வில், 617 மாணவியர் சேர்ந்துள்ளனர். இக்கல்லுாரியில் மொத்த இடங்கள், 970 ஆகும். எனவே, மீதமுள்ள இடங்களுக்கு, இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு, நேற்று தொடங்கியது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமையில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய நான்கு கலை பாடப் பிரிவுகளுக்கு இந்த கலந்தாய்வு நடந்தது. இதில், 60 மாணவியர் கலந்து கொண்டனர். இவர்களில், 21 பேருக்கு சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது. இன்று கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய அறிவியல் பாட பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.