/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மதுவிலக்கு வழக்கில் திருந்தி வாழ்பவர்களுடன் ஆலோசனை
/
மதுவிலக்கு வழக்கில் திருந்தி வாழ்பவர்களுடன் ஆலோசனை
மதுவிலக்கு வழக்கில் திருந்தி வாழ்பவர்களுடன் ஆலோசனை
மதுவிலக்கு வழக்கில் திருந்தி வாழ்பவர்களுடன் ஆலோசனை
ADDED : ஜூலை 28, 2024 04:00 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் பகுதியில் மதுவிலக்கு வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கான ஆலோசனை கூட்டம், போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''மதுவிலக்கு வழக்கில் தண்டணை பெற்று, தற்போது திருந்தி வாழ்பவர்களுக்கு அரசாங்-கத்தால், மறு வாழ்வுக்கான பணம், 50,000 ரூபாயை பெற்று தரப்படும். வாழ்வாதாரத்திற்கு வேண்டிய அனைத்து உதவி-களும், தமிழக அரசு உத்தரவுப்படி, போலீசார் மூலம் பரிந்துரை செய்யப்படும்,'' என்றார். இதில், எஸ்.ஐ.,க்கள் தங்கவடிவேல், பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
துாய்மை பணியாளர்களுக்குநிர்வாக பொறியாளர் பாராட்டு
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதியில், மதுரையை சேர்ந்த மண்டல டவுன் பஞ்., நிர்வாக பொறியாளர் சாய்ராஜ், ப.வேலுார் பகுதியில் உள்ள, 27 சுகாதார வளாகங்களை பார்-வையிட்டார். அப்போது, 12வது வார்டு பகுதியில் சுகாதார வளா-கத்தை பார்வையிட்டபோது, அப்பகுதி மக்களிடம் சுகாதார வளாகம் குறித்து விசாரித்தார். அதற்கு, அப்பகுதியை சேர்ந்த மக்கள், 'சுகாதார வளாகத்தை தினந்தோறும் ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகிறோம். குளிக்கும் வசதி இருப்பதால், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது' என, தெரிவித்தனர். அப்போது, டவுன் பஞ்., நிர்வாக பொறியாளர் சாய்ராஜ், ப.வேலுார் டவுன் பஞ்., அலுவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களை பாராட்-டினார்.

