/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கார் மோதி தம்பதி பலி; ஐந்து பேர் படுகாயம்
/
கார் மோதி தம்பதி பலி; ஐந்து பேர் படுகாயம்
ADDED : ஜூலை 22, 2024 12:53 AM
ப.வேலுார் : நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே மறவாபாளையத்தை சேர்ந்தவர் சின்னையன், 70; விவசாயி. இவரது மனைவி சாந்தி, 60; இருவரும் நேற்று காலை பரமத்தியில் உள்ள மருத்துவமனைக்கு டூ - வீலரில் புறப்பட்டனர்.
நாமக்கல் - கரூர் பைபாஸ் சாலையில், 10:00 மணியளவில் சென்றபோது, நாமக்கல் நோக்கி சென்ற கார், டூ - வீலர் மீது மோதி கவிழ்ந்தது. இதில், சின்னையன், சாந்தி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காரை ஓட்டிய தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமார், 34, அவரது மனைவி ரேணுகாதேவி, 30, உறவினர்கள் சித்ரா, 26, வெங்கடேஷ், 30, விஜயகுமார், 35, ஆகியோர் படுகாயமடைந்தனர். ஐந்து பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.