/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சீமை கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் அவதி
/
சீமை கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 01, 2024 03:59 AM
மோகனுார்: 'சாலையை ஆக்கிரமித்து, பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
மோகனுாரில் இருந்து திருச்சி மாவட்டம், காட்டுப்புத்துார் செல்லும் சாலையில், ஏராளமான அரசு, தனியார் பஸ்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள், லாரி, கார், பைக் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
இச்சாலையில், ஒருவந்துாரில் இருந்து, வடுகப்பட்டி வரை, சாலையின் இருபுறமும், சீமை கருவேல மரங்களும், நாணல் தட்டும் அதிகளவில் வளர்ந்து படர்ந்துள்ளன. இது, சாலையை ஆக்கிரமித்துள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
டூவீலரில் செல்லும்போது, எதிரே வாகனங்கள் வந்தால், ஒதுங்க முடியாத நிலையில், சீமை கருவேல மரங்கள் முட்கள், வாகன ஓட்டிகளின் உடலை பதம் பார்க்கும் நிலை உள்ளது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் அமைந்துள்ளது.
இவற்றை அவ்வழியாக செல்லும் நெடுஞ்சாலைத்துறையினரின் கண்களில் படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.