/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நுாற்பாலை தொழிலாளி தனியார் பஸ் மோதி சாவு
/
நுாற்பாலை தொழிலாளி தனியார் பஸ் மோதி சாவு
ADDED : ஏப் 16, 2024 01:48 AM
பள்ளிப்பாளையம்;ஒடிசா மாநிலம், பண்டிலிபடா பகுதியை சேர்ந்தவர் சிமான்ஷல் சாகு, 30; பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நுாற்பாலையில் வேலை செய்து
வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிமான்ஷல் சாகு, டூவீலரில் பள்ளிப்பாளையம் அருகே, மாதேஸ்வரன் கோவில் பஸ் ஸ்டாப் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த தனியார் பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயமடைந்த சிமான்ஷல் சாகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் திரண்டு, இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்று விபத்து
நடக்கிறது.
அதனால், வேகத்தடை அமைக்க வேண்டும் என, சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளிப்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

