/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காப்பீட்டு திட்டத்தில் குறைபாடு: ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
காப்பீட்டு திட்டத்தில் குறைபாடு: ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
காப்பீட்டு திட்டத்தில் குறைபாடு: ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
காப்பீட்டு திட்டத்தில் குறைபாடு: ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 07, 2024 01:50 AM
நாமக்கல், புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் குறைபாடுகளை களையக்கோரி, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். அதில், புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தில், ஓய்வூதியர்கள் அனுப்பிய கோரிக்கை விண்ணப்பங்கள் மீது முடிவு எடுப்பதில் காப்பீட்டு நிறுவனம் காலதாமதம் ஏற்படுத்துவதை கண்டித்தும்; ஓய்வூதியரால் சிகிச்சை செய்வதற்கு கோரப்படும் தொகைக்கும், காப்பீட்டு
நிறுவனம் வழங்கும் தொகைக்கும் எந்த பொருத்தமும் இல்லாமல் மிகக் குறைவான நிதியே வழங்கப்படுவதை கண்டித்தும்; முழுமையான பணமில்லா சிகிச்சை என்பது மறுக்கப்படுவதை கண்டித்தும், கோரிக்கை மனுக்கள் எந்த அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது என்பதை கண்டறிய வலைதளம் உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மாநில செயற்குழு உறப்பினர் செல்வம், மாவட்ட தலைவர் இளங்கோவன், செயலாளர் குப்புசாமி, பொருளாளர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.